அதிரவிடும் விலை.. 8000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. அறிமுகமானது புது Samsung டேப்லெட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் (Samsung Galaxy Tab S10 Lite) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த சாம்சங் டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் அம்சங்கள் (Samsung Galaxy Tab S10 Lite Specifications): 10.9-இன்ச் WUXGA டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2112×1320 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

எக்ஸினோஸ் 1380 (Exynos 1380) பிராசஸர் உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15.0 (Android 15.0) இயங்குதள வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் விற்பனைக்கு வரும. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு IP42 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
வைஃபை 6, புளூடூத் வி5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் 2 ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் கிரே, சில்வர், கோரல் ரெட் நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் எடை 524 கிராம் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் விலை
128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் Wi-Fi வெர்ஷன் விலை €399 (இந்திய மதிப்பில் ரூ.40,855) ஆக உள்ளது. பின்பு இதன் 256ஜிபி மெமரி கொண்ட Wi-Fi வெர்ஷன் விலை €469 (இந்திய மதிப்பில் ரூ.48,020) ஆக உள்ளது.
12ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் 5G Version விலை €459 (இந்திய மதிப்பில் ரூ.46,995) ஆக உள்ளது. பின்பு இதன் 256ஜிபி மெமரி கொண்ட 5G Version விலை €529 (இந்திய மதிப்பில் ரூ.54,165) ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் இந்த டேப்டெல் மாடலின் விற்பனை தொடங்கும்.


Click it and Unblock the Notifications








