Home
Tablets

நேரம் வந்துருச்சு.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 8000mAh பேட்டரி.. 2TB மெமரி.. புது SAMSUNG டேப்லெட்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் எப்போது விற்பனைக்கு வரும் என்று சாம்சங் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் (Samsung Galaxy Tab S10 Lite) டேப்லெட் ஒருவழியாக ஆஃபருடன் வந்துவிட்டது. டிஎப்டி டிஸ்பிளே, 8000mAh பேட்டரி, 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 சிப்செட் கொண்ட கேலக்ஸி டேப் எஸ்10 லைட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லைட் மாடலாக இருப்பதால், வெறும் 6.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 524 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கிறது. அதேபோல கேலக்ஸி ஏஐ கீ (Galaxy AI Key) கிடைக்கிறது. எஸ் பெஸ் (S Pen) சப்போர்ட் கொடுக்கிறது. டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களை பார்க்கலாம்.

நேரம் வந்துருச்சு.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 8000mAh பேட்டரி.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் அம்சங்கள் (Samsung Galaxy Tab S10 Lite Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ பவர்டு மல்டி மீடியா பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆப்ஜெக்ட் எரைசர், ஹேண்ட்ரைட்டிங் ஹெல்ப் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன.

வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டிகள் கொண்ட 2 மாடல்கள் கிடைக்கின்றன. இதில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுபோக 2 டிபிக்கான கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

1.6W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. IP42 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட் மாடலில் கோரல் ரெட் (Coral Red), சில்வர் (Silver) மற்றும் கிரே (Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் விலை (Samsung Galaxy Tab S10 Lite Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை (Wi-Fi) வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும் இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 5ஜி (5G) வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல சாம்சங் வெப்சைட் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம். ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S10 Lite is Now Available For Purchase in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X