இந்திய மார்கெட் மிரளுது.. 13.1 இன்ச் டிஸ்பிளே.. 10090mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த டேப்லெட்?
இந்திய மார்கெட்டே மிரளும்படியான பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE+) டேப்லெட்கள் களமிறங்கி இருக்கின்றன. 13.1 இன்ச் டிஸ்பிளே, 5ஜி கனெக்டிவிட்டி, 10090mAh பேட்டரி, 45W சார்ஜிங், ஈசிம் சப்போர்ட் போன்ற பீச்சர்கள் மட்டுல்லாமல், ஏஐ டூல்ஸ்களுடன் களமிறங்கி இருக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ சீரிஸ்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த பிரீமியம் டேப்லெட்களில் கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் (Gemini AI Assistant), சர்க்கிள் டூ சர்ச்ச (Circle to Search), ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser), பெஸ்ட் பேஸ் (Best Face), ஆட்டோ டிரிம் (Auto Trim) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இப்போது, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி பீச்சர்களை பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, எஸ்10 எப்இ பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab S10 FE, S10 FE+ Specifications): எஸ்10 எப்இ மாடலில் 10.9 இன்ச் (2304 x 1440 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எஸ்10 எப்இ பிளஸ் மாடலில் 13.1 இன்ச் (2304 x 1440 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
இந்த டிஸ்பிளேக்களில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. எஸ்10 எப்இ மாடலில் 8000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. எஸ்10 எப்இ பிளஸ் மாடலில் 10090mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இரண்டு மாடல்களும் 6.0 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது.
ஆனால், எஸ்10 எப்இ மாடலானது 500 கிராம் எடையும், பிளஸ் மாடலானது 668 கிராம் எடையும் வருகிறது. இந்த பீச்சர்களை தவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட என்ஸினோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 2 டிபிக்கான மெமரி கார்டு சிலாட் சப்போர்ட் உள்ளது. 5ஜி கனெக்டிவிட்டி, வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth v 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் இல்லை, டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மட்டுமே கிடைக்கின்றன.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ சீரிஸ் மாடல்களுக்கு எஸ் பென் (S Pen) சப்போர்ட் கிடைக்கிறது. பவர்-கீ ஃபிங்கர்பிரிண்ட் (Power Key Fingerprint) சப்போர்ட் கிடைக்கிறது. 5ஜி வேரியண்ட்களில் 1 பிசிகல் சிம் மற்றும் 1 ஈசிம் சப்போர்ட் கிடைக்கிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
ஆட்டோ போகஸ் கொண்ட 13 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. மெயின் கேமராவில் அல்ட்ரா எச்டி 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் இந்தியா உள்பட உலகளவில் களமிறங்கி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ சீரிஸ் விலை விவரங்கள் இதோ.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ விலை (Samsung Galaxy Tab S10 FE Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.42,999 ஆகவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.50,999 ஆகவும் இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வேரியண்ட்டின் விலை ரூ.53,999 ஆக இருக்கிறது. அதே போல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.61,999 ஆக இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் விலை (Samsung Galaxy Tab S10 FE+ Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.55,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை/5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.63,999 ஆகவும் இருக்கிறது.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.65,999ஆக இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.73,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் ப்ரீ-புக்கிங் தொடங்கிவிட்டது.
அமேசான் (Amazon) மற்றும் சாம்சங்.காம் (Samsung.com) தளங்களில் ப்ரீ-புக்கிங் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு உடனடி டிஸ்கவுண்ட்,, ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.
ஆகவே, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ மாடல்களுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடல்களுக்கு ரூ.5,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற எச்டிஎப்சி கிரெடிட் கார்டு அல்லது ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும்.
இது ஃபுல் கேஷ் அல்லது ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு பொருந்தும். இதுபோக ஏப்ரல் 6ஆம் தேதிக்கு முன்பாக ப்ரீ-புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.6,999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 (Samsung Galaxy Buds 3) அல்லது ரூ.14,999 மதிப்புள்ள ஓஆர் கீபோர்டு கொடுக்கப்படும். கிரே (Gray), சில்வர் (Silver), லைட் ப்ளூ (Light Blue) கலர்களில் கிடைக்கிறது.
இப்படி ஏராளமான சலுகைகளை சாம்சங் நிறுவனம் கொடுக்கிறது. ஆப்பிள் டேப்லெட்களுக்கு நிகரான பீச்சர்களை அதைவிட கொஞ்சம் மலிவான விலையில் பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ சீரிஸ் மாடல்கள் சரியான தேர்வாக இருக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








