இவரு வேற மாதிரி.. 10100mAh பேட்டரி.. 10.1 இன்ச் டிஸ்பிளே.. IP68 ரேட்டிங்.. மிலிட்டரி கிரேடு.. எந்த டேப்லெட்?
ரக்கட் ஸ்மார்ட்போன் பாத்துருப்பீங்க, ரக்கட் டேப்லெட் பாத்துருக்கீங்களா? அப்படியான டேட்லெட்டை சாம்சங் நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன், மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் போன்ற டியூரபிலிட்டி பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ்5 ப்ரோ (Samsung Galaxy Tab Active5 Pro) டேப்லெட் வெளியாகி இருக்கிறது. 10.1 இன்ச் டிஸ்பிளே, டூயல்-ஹைட் ஸ்வாப் சப்போர்ட் கொண்ட 10100mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களும் மிரளவிடுகின்றன.
குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், ஐரோப்பா மற்றும் யுஎஸ் மார்கெட்களில் முதலில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஐரோப்பிய மார்கெட்டில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆனால், யுஎஸ் மார்கெட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் விற்பனை தொடங்க இருக்கிறது. இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ்5 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy Tab Active5 Pro Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
WUXGA ரெசொலூஷன் கொண்ட 10.1 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் விஷன் பூஸ்டர் டெக்னாலஜி (Vision Booster Technology) கிடைக்கிறது. குளோவ் டச், வெட் சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ்5 ப்ரோ மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்களில் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
டூயல் ஹாட் ஸ்வாப் (Dual Hot Swap) சப்போர்ட் கொண்ட 10100mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, ரீபிளேஸ் செய்துகொள்ளும்படி 2 பேட்டரிகள் சப்போர்ட் கிடைக்கும். இந்த டேப்லெட்டில் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. இந்த மாடலுக்கு எஸ் பென் (S Pen) கிடைப்பதால் அதற்கும் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் உள்ளது.
ரக்கட் மாடலாக இருப்பதால், போகோ பின் (POGO Pin) சார்ஜிங் சப்போர்ட் மட்டுமே கிடைக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் சாம்சங் கினாக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு 5ஜி டேப்லெட்டாக இருப்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ்5 ப்ரோ மாடலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.67,975ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.78,690ஆகவும் இருக்கிறது. முதலில் ஐரோப்பிய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதன்பிறகு மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








