இந்தியாவில் அறிமுகமானது புது Samsung 5ஜி டேப்லெட்.. 7 வருட OS அப்டேட்.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் (Samsung Galaxy Tab Active 5 Enterprise Edition) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸிநோஸ் சிப்செட், 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட், 13எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy Tab Active 5 Enterprise Edition Specifications): 8-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வசதியுடன் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5 protection) ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

சக்திவாய்ந்த 5என்எம் ஆக்டா-கோர் எக்ஸிநோஸ் 13380 எஸ்ஒஎசி (5nm octa-core Exynos 1380 SoC)சிப்செட் வசதியுடன் இந்த புதிய சாம்சங் டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி எனவே இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் டேப்லெட் மாடலை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
13எம்பி ரியர் கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது.
5050mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (fingerprint scanner), ஃபேஸ் அன்லாக் (Face unlock) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன். டால்பி அட்மாஸ் ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 எண்டர்பிரைஸ் எடிஷன் விலை ரூ.49,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.56,999-ஆக உள்ளது. தற்போது இந்த சாதனத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








