இந்தியா: மிரட்டலான கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனம் அறிமுகம்.!
கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனம் 4,450எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 என்ற டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த சாதனம் எஸ்-பென் ஆதரவு மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்தில் அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக தான இருக்கிறது,ஆனால் இவற்றின் விலை தான் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனம் பொதுவாக 8-இன்ச் றுஓபுயு வுகுவு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280 x 800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

ஐபி68 சான்றிதழ்:
இப்போது வந்துள்ள கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட் மாடல்களுக்கு ஐபி68 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் புகாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன் வெளிவருகிறது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லேட்.

மென்பொருள்:
கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனம் பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7870 செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு மேலும் மாலி டி830 ஜிபியு ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

கேமரா:
இந்த டேப்லெட் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ்ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு கைரேகை ஸ்கேனர் ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனம் 4,450எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தில்
ஆரம்ப விலை 50,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications