மிரளுது மார்கெட்.. 8.7-இன்ச் டிஸ்பிளே.. Dolby Atmos.. அறிமுகமானது சாம்சங் டேப்லெட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்கிறது சாம்சங்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது புதிய சாம்சங் டேப் ஏ9 மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9) ஆனது 8.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 800 x 1,340 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பினே. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் 3டி ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (dual speakers) கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் மெட்டல் யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் டேப்லெட் மாடல்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடலில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது. ஆனால் இதன் கேமரா விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை. ஆனாலும் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் ( MediaTek Helio G99 chipset) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மீடியாடெக் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயன்களுக்குத் தகுந்தபடி இந்த டேப்லெட் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்டெல் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த புதிய சாம்சங் டேபலெட் மாடலின் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடலில் விலை $190 (இந்திய மதிப்பில் ரூ.15,999) ஆக உள்ளது. விரைவில் இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








