Home
Tablets

கும்பிடு போட்டு வாங்கலாம்.. 8.7-இன்ச் டிஸ்பிளே..கம்மி விலையில் சாம்சங் டேப்லெட்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அசத்தலான டேப்லெட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டேப்லெட் மாடலுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ9 எனும் டேப்லெட் மாடலை அக்டோபர் 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

கும்பிடு போட்டு வாங்கலாம்.. கம்மி விலையில் சாம்சங் டேப்லெட்..

குறிப்பாக கேலக்ஸி டேப் ஏ9 மாடல் ஆனது S Pen ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 8.7-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். பின்பு 1,340 x 800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த டிஸ்பிளேவில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9) மாடல் ஆனது மீடியாடெக் எம்டி8781 சிப்செட் (MediaTek MT8781 chipset) வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த புதிய சாம்சங் டேப்லெட். அதுபோல இது 4ஜி கனெக்டிவிட்டி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல். பின்பு ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவரும் இந்த சாம்சங் டேப்லெட். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மாடல் ஆனது குறைந்த விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கேலக்ஸி டேப் ஏ9 மாடலில் சில அம்சங்கள் தான் வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் இந்த டேப்லெட் மாடலின் அனைத்து அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OneUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (ஓஎஸ்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) ஸ்மார்ட்போனில் 6000 எம்எஎச் பேட்டரி வசதி உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன். செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

கும்பிடு போட்டு வாங்கலாம்.. கம்மி விலையில் சாம்சங் டேப்லெட்..

சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி ஸ்மாரட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், ப்ளூ-லைட் பாதுகாப்பு வசதி, விஷன் பூஸ்டர் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

5ஜி (டூயல்-சிம்), என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போன் வெளிவந்துள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்34 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A9 will be launched in India on October 5: check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X