முழுசா ரூ.3000 கட்.. ரூ.17,999 போதும்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 8GB ரேம்.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசானில் பட்டையை கிளப்பும் ஆஃபருடன் ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் டாப் 4 டேப்லெட்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இதில், சாம்சங் கேலக்ஸி ஏ9 பிளஸ், லெனோவா டேப் பி12, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட், சியோமி பேட் 5 ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ9 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Plus Specifications): இந்த டேப்லெட் 11 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் சிப்செட் வருகிறது. இதில் 8 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதேபோல 2 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,040mAh பேட்டரி வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசானில் ரூ.3000 டிஸ்கவுண்டுடன் வெறும் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 specifications): இந்த டேப்லெட் 12.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் வருகிறது. இந்த டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதேபோல 13 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 20W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10200mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசானில் ரூ.3500 டிஸ்கவுண்டுடன் வெறும் ரூ.21,499க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் அம்சங்கள் (Samsung Galaxy Tab S6 Lite Specifications): இந்த டேப்லெட்டில் 10.1 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) டிஎப்டி டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 10என்எம் சிப்செட் கொண்டிருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டைப்-சி சார்ஜிங் கொண்ட 7040mAh பேட்டரி வருகிறது. லைட் டிசைன் கொண்டிருப்பதால், 467 கிராம் எடைக் கொண்டுள்ளது.
இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு, ரூ.6000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.17,999க்கு வாங்கிக்கொள்ளலாம்.
சியோமி பேட் 5 அம்சங்கள் (Xiaomi Pad 5 Specifications): இந்த டேப்லெட் 10.95 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் வருகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8720mAh பேட்டரி வருகிறது. டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசானில் ரூ.1250 தள்ளுபடியுடன் வெறும் ரூ.21,749க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications