சிறுவர்களுக்கு 1 வாங்கலாம்.. 7040mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. அறிமுகமானது Samsung 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் (Samsung Galaxy Tab A9 Plus Kids Edition) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது பாதுகாப்பான நெறிமுறைகளுடன் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குழந்தைகள் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் வளரவும் அனுமதிக்கிறது. குறிப்பாக இதன் டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Plus Kids Edition Specifications): 11-இன்ச் WQXGA எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளேவுடன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ப்ரீ-இன்ஸ்டால்ட்டு சாம்சங் கிட்ஸ் ஆப் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டுகள் இதில் உள்ளன.
8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்ப செல்பி கேமரா ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன்.
எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆயோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் கிராஃபைட் நிறத்தில் இந்த சாம்சங் டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இதற்கு நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு கேஸ் வண்ணங்களைத் தேர்வுசெய்யலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
7040mAh பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15று அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), குளோனாஸ் (Glonass), பெய்டியூ (Beidou), கலிலியோ (Galileo), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் மாடலில் உள்ளன.
ஆனால் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் கிட்ஸ் எடிஷன் ஆனது தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் விலை USD 269 (இந்திய மதிப்பில் ரூ.22,536)-ஆக உள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








