Home
Tablets

சரவெடி ஆஃபர்.. வெறும் ரூ.10,699 பட்ஜெட்ல சாம்சங் டேப்லெட்.. 15W சார்ஜிங்.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்களே வியக்கும் படியான மலிவான பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9) அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் விதமாக அமேசான் தளத்தில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி டேப் 8.7 இன்ச் (800 x 1340 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு வைடு குவாட் எக்ஸ்டென்டெட் கிராபிக்ஸ் அர்ரேய் (Wide Quad Extended Graphics Array) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வெறும் ரூ.10,699 பட்ஜெட்ல சாம்சங் டேப்லெட்.. 5100mAh பேட்டரி வேற!

இந்த சாம்சங் டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஒன்யுஐ 5.1.1 ஓஎஸ் (OneUI 5.1.1 OS) கொண்டுள்ளது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த சாம்சங் டேப்லெட் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வை-பை (Wi-Fi), 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) ஆகிய 3 மாடல்களும் வருகின்றன.

இதில் வை-பை மாடலை தவிர மற்ற மாடல்களில் டூயல் நானோ சிம் (Dual Nano SIM ) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஈ-சிம் (eSIM) சப்போர்ட்டும் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப்லெட் மாடலில் 8 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல 2 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த டேப்லெட்டில் 15W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Adaptive Fast Charging) சப்போர்ட் கொண்ட 5,100mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப் - சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏகேஜி டியூன்டு டூயல் (AKG Tuned Dual) ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது.

இந்த சாம்சங் டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் +64 ஜிபி மெமரி கொண்ட வை-பை மாடலின் விலை ரூ.12,999ஆகவும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட 4ஜி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ9 டேப்லெட் டார்க் ப்ளூ (Dark Blue), கிரே (Grey) மற்றும் சில்வர் (Silver) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த லேப்லெட்டுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பட்டையை கிளப்பும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்யும்போது, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், வை-பை மாடலுக்கு ரூ.2,299 டிஸ்கவுண்டும், 4ஜி மாடலுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது.

ஆகவே, வை-பை மாடலை வெறும் ரூ.10,699க்கும், 4ஜி மாடலை வெறும் ரூ.13,499க்கும் வாங்கிக் கொள்ள முடியும். மலிவான விலையில் சாம்சங் பிராண்ட், நல்ல சிப்செட் மற்றும் பேட்டரி பேக்கப் கொண்ட டேப்லெட் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A9 Massive Discount on Amazon Great Indian Festival Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X