Home
Tablets

11-இன்ச் டிஸ்பிளே, 7040mAh பேட்டரி.. நம்பவே முடியாத விலை! Samsung Galaxy Tab A9, A9 Plus இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் 2 புதிய டேப்லெட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த கையோடு, அவற்றின் விற்பனையையும் தொடங்கி உள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் விலை என்ன? அறிமுகம் சலுகைகள் ஏதேனும் உண்டா? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியாவில் அதன் கேலக்ஸி டேப் ஏ9 சீரிஸ் டேப்லெட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சீரீஸின் கீழ் கேலக்ஸி டேப் ஏ9 (Samsung Galaxy Tab A9) மற்றும் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் (Samsung Galaxy Tab A9 Plus) என்கிற 2 டேப்லெட் மாடல்கள் உள்ளன.

Samsung Galaxy Tab A9, A9 Plus இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 சீரிஸ் டேப்லெட்களின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை டேப் ஏ9 மற்றும் டேப் ஏ9 பிளஸ் ஆகிய இரண்டு டேப்லெட்களும் முறையே 8.7-இன்ச் அளவிலான WQXGA மற்றும் 11-இன்ச் அளவிலான WQXGA LCD டிஸ்பிளேக்களை பேக் செய்கின்றன.

டேப் ஏ9 பிளஸ் 5ஜி வேரியண்ட் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு உடனான குவாட் ஸ்பீக்கர் சிஸ்டமையும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள டேப் ஏ9 மாடலானது டூயல் ஸ்பீக்கர்களையும் மற்றும் 4ஜி செல்லுலார் கனெக்டிவிட்டியையும் கொண்டுள்ளது.

Samsung Galaxy Tab A9, A9 Plus இந்தியாவில் அறிமுகம்!

இந்த இரண்டு புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்களுமே மென்மையான அமைப்புடைய பேக் பேனல் மற்றும் ஒரே மாதிரியான வடிவமைப்பை பெறுகின்றன. வேறுபாடுகளை பொறுத்தவரை, டேப் ஏ9 பிளஸ் மாடலில் சாம்சங் டெக்ஸ் ஆதரவு உள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, ஏ9 மாடலில் ஹீலியோ ஜி99 (Helio G99) சிப் உள்ளது. மறுகையில் உள்ள ஏ9 பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 695 (Snapdragon 695) சிப்செட் உள்ளது,

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.1.1 (One UI 5.1.1) மூலம் இயங்குகின்றன. பேட்டரியை பொறுத்தவரை, கேலக்ஸி டேப் ஏ9 ஆனது 5100mAh பேட்டரியை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள கேலக்ஸி டேப் ஏ9 பிளா ஆனது 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 7,040mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Samsung Galaxy Tab A9, A9 Plus இந்தியாவில் அறிமுகம்!

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமராவும், 2எம்பி செல்பீ கேமராவும் உள்ளது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமராவும், 5எம்பி செல்பீ கேமராவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 இந்திய விலை நிர்ணயம்: 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 டேப்லெட்டின் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகும். அதே 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் எல்டிஇ வேரியண்ட்டின் விலை ரூ.15,999 ஆகும்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் இந்திய விலை நிர்ணயம்: 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட்டின் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆகும்; 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ.20,999 ஆகும்.

Samsung Galaxy Tab A9, A9 Plus இந்தியாவில் அறிமுகம்!

இதேபோல 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட்டின் 5ஜி வேரியண்ட் ஆனது ரூ.22,999 என்றும், 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 5ஜி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் ஆகிய இரண்டுமே சில்வர், கிராஃபைட் மற்றும் டார்க் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட எச்டிஎப்சி வங்கி அட்டைகளை பயன்படுத்தினால் ரூ.1,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A9 and A9 Plus Tablets Launched in India Price Specifications Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X