ரூ.17,999-விலையில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம்.! முழு விவரம்.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஏ8 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் யுனிசாக் பிராசஸர், அத்தலான கேமரா போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இப்போது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விற்பனை வரும் ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில்வர், கிரே, பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடல் ஆனது 10.5-இன்ச் டி.எப்.டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000x1200பிக்சல்
தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இந்த டேப்லெட்டின் மேல் வலது பக்கத்தில் அமைந்துள்ளன. அதேபோல் இந்த சாதனம் டால்பி அட்மோஸிற்கான ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் ஆனது யுனிசாக் டி618 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த புதிய சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் ஏ8 மாடல்.

4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத் 5 எல்இ, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 508 கிராம் எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சாதனத்தை சாம்சங்.காம், அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications