அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் ஆனது 10.5-இன்ச் டி.எப்.டி. டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1920x1200 பிக்சல் தீர்மானம், 16:10 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய சாதனம் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மூலம் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
Unisoc T610 சிப்செட் வசதியை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் Mali G52 MP2 GPU ஆதரவையும் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 5எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை
நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 7040 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ்; பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

வைஃபை, ப்ளூடூத் 5, 3.5எமஎம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி 2.0 போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ், குவாட்-ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் 2021 மாடலின் ஆரம்ப விலை €229 (ரூ.19,700) ஆக உள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே சாம்சங் உட்பட பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications