Home
Tablets

8.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தை ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின் டேப்லெட் சாதனங்களை சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

8.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.!

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் அடுத்து பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தில் 8.4-இன்ச் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார், செல்பீ கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய கேலக்ஸி டேப் ஏ7 சாதன்தில் ஹீலியோ பி22டி பிராசஸர் வசதி உள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 மாடலில் இடம்பெறும் கேமரா சென்சார்கள் பற்றி தகவல் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ப்ளூடூத் 5, வைபை, 4ஜி எல்டி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது கேலக்ஸி டேப் ஏ7 மாடல். இதேபோல் லெனோவா நிறுவனமும் விரைவில் லெனோவா டேப் எம்8 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.கூகிள் பிளே கன்சோல் பட்டியலில் (3 வது- ஜெனரல்) லெனோவா டிபி -8506 எஃப் மாடல் எண்ணுடன் லெனோவா டேப் எம்8 காணப்படுகிறது.மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

8.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.!

லெனோவா டேப் எம்8 மாடல் ஆனது மீடியாடெக் MT8768WT பிராசஸர் உடன் ஆக்டோ-கோர் 4ஜி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த புதிய சாதனம் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1280 x 800 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக 8-இன்ச் பேனல் வசதியுடன் லெனோவா டேப் எம்8 மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா டேப் எம்8 மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. லெனோவா டேப் எம்8 மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

8.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.!

லெனோவா டேப் எம்8 மாடலில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A7 Lite with 8.4-inch Display Launching in India on June: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X