சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ சாதனங்கள் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை அசத்தலான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் டேப்லெட் மாடலின்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் இங்கிலாந்து, ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ்,நெதர்லாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளதுசாம்சங் நிறுவனம். மேலும் இந்த இரண்டு சாதனங்களும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ அம்சங்கள்
- டிஸ்பிளே: 12.4-இன்ச் எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்பிளே(2560x1600 பிக்சல்கள்)
- 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- எச்டிஆர் 10 ஆதரவு
- சிப்செட்: ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதி
- ரேம்: 4ஜிபி
- மெமரி: 64ஜிபி/128
- ரியர் கேமரா: 8எம்பி
- செல்பீ கேமரா: 5எம்பி
- பேட்டரி: 10,900 எம்ஏஎச் பேட்டரி
- 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- எஸ்-பென் ஆதரவு
- 5 ஜி, புளூடூத், வைஃபை,
- யூ.எஸ்.பி-சி போர்ட்
- டிஸ்பிளே: 8.7-இன்ச் WXGA+ TFT டிஸ்பிளே (1340 x 800 பிக்சல்கள்)
- சிப்செட்: ஹீலியோ பி22டி சிப்செட் (MT8768T) உடன் கார்டெக்ஸ்-ஏ53 கோர் ஆதரவு
- PowerVR GE8320 ஜிபியு ஆதரவு
- ரேம்: 4ஜிபி
- மெமரி: 64ஜிபி
- ரியர் கேமரா: 8எம்பி
- செல்பீ கேமரா: 2எம்பி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- பேட்டரி: 5100 எம்ஏஎச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,
- புளூடூத் 5 எல்இ, ஜிபிஎஸ், க்ளோனாஸ்
- யூ.எஸ்.பி 2.0 டைப்-சி போர்ட்
- டால்பி அட்மோஸ் ஆதரவு
- இரட்டை-ஸ்பீக்கர் அமைப்பு

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ விலை
64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.60,700-ஆக உள்ளது. பின்பு 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.64,800-ஆக உள்ளது. மேலும் மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் சில்வர், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிங்க் நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் விலை
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனதின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.15,400-ஆக உள்ளது. சாம்பல் மற்றும் வெள்ளி நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனம்.


Click it and Unblock the Notifications