Samsung அறிமுகம் செய்த புது 5ஜி டேப்லெட்.. 7 வருட OS அப்டேட்.. 256ஜிபி மெமரி.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் (Samsung Galaxy Tab A11 Plus) மாடலை அறிமுகம் செய்துள்ளது. 7040எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே, 256ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்தது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A11 Plus Specifications): 11-இன்ச் WUXGA எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பளேவில் 1920×1200 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்தலாம்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
One UI 8 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதுகாப்பு அப்டேட்களும் இந்த சாதனத்திற்கு வழங்கப்படும்.
கூகுள் ஜெமினி(Google Gemini) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் 8எம்பி ரியர் கேமரா வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.
7040mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

குறிப்பாக இது ஒரு 5ஜி டேப்டெல் ஆகும். மேலும் வைஃபை 5, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் டால்பி அட்மாஸ் ஆடியோவுடன் குவாட் ஸ்பீக்கர்களும் இந்த டேப்டெல் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
தற்போது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் மாடல் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ் 5ஜி மாடலின் ஆரம்ப விலை £299 (இந்திய மதிப்பில் ரூ.34,901)-ஆக உள்ளது. கிரே மற்றும் சில்வர் நிறங்களில் இந்த டேப்லெட் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








