Samsung அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. கம்மி விலை.. 5100mAh பேட்டரி.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 (Samsung Galaxy Tab A11) மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் கம்மி பட்ஜெட்டில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 அம்சங்கள் (Samsung Galaxy Tab A11 Specifications): 8.7-இன்ச் WXGA டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ள மேலும் இதன் டிஸ்பிளேவில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்னே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது.
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். குறிப்பாக 5100எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த டேப்லெட் மாடல் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும்.
வைஃபை, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் 337 கிராம் எடை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 விலை
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் 11 (Wi-Fi) வேரியண்ட் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் 11 (Wi-Fi) வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் 11 (W-Fi + Cellular) வேரியண்ட் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் 11 (W-Fi + Cellular) வேரியண்ட் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








