Home
Tablets

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. ரூ.12999 பட்ஜெட்ல 7 வருட OS அப்டேட்.. டால்பி அட்மாஸ்.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 (Samsung Galaxy Tab A11) மாடலை அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் சிப்செட், டால்பி அட்மாஸ், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. தற்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 அம்சங்கள் (Samsung Galaxy Tab A11 specifications): 8.7-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 800×1340 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. ரூ.12999 பட்ஜெட்ல 7 வருட OS அப்டேட்..

அதபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் புதிய சாம்சங் டேப்லெட் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது.

One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 7 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

8எம்பி ரியர் கேமரா உடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த சாதனத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த புதிய சாம்சங் சாதனத்தில் உள்ளன.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலில் உள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் வி5.3, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலில் உள்ளன. பின்பு கிரே மற்றும் சில்வர் நிறங்களில் இந்த புதிய சாம்சங் டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 விலை:
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி (Wi-Fi) கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலின் விலை ரூ.12,999
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி (Wi-Fi + 4G LTE) கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலின் விலை ரூ.15,999
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (Wi-Fi) கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலின் விலை ரூ.17,999
84ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (Wi-Fi + 4G LTE) கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலின் விலை ரூ.20,999

பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளத்தில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11 மாடலை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A11 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X