5000எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 அறிமுகம்.!
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி டேப்லேட் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது, வியட்நாமில் இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 டேப்லேட் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடிய விரைவில் இந்திய சந்தைகளில் இந்த டேப்லேட் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 பொறுத்தவரை பல அதிநவீன தொழில்நுட்ப மென்பொருளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த டேப்லேட் மாடலின் இந்திய விலை மதிப்பு ரூ.18,200ஆக உள்ளது.

8-இன்ச் டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 பொதுவாக 8-இன்ச் WXGA டிஸ்பிளேவை கொண்டுள்ளது, அதன்பின் (1280-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த டேப்லேட் மாடல்.

குவாட்-கோர்:
குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப். அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட்
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் நானோ சிம் கார்டை ஆதரிக்கிறது.

கேமரா:
இந்த டேப்லேட் மாடலின் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

நினைவகம்:
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 பொறுத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications