ரூ.9500/-க்கு கேலக்ஸி டாப் ஏ7.0 அறிமுகம்; ரூ.7500/-க்கு ஜியோ சலுகை.!
வெள்ளை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வெளியாகும் இந்த டாப்ளெட்டிற்கு சில சுவாரஸ்யமான ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
சாம்சங் அதன் டாப்ளெட் பிரிவில் ஒரு புதிய உறுப்பினரை இணைத்துள்ளது. ஆம் இந்தியாவில் அதன் கேலக்ஸி டாப்ளெட் 7.0 அறிமுகமாகியுள்ளது. இந்த டாப்ளெட்டின் விலை ரூ.9,500/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் (ஜனவரி 5, 2018) தொடங்கி, அமேசானிலும் மற்றும் இதர சில்லறை விற்பனை நிலையங்களிலும் வாங்க கிடைக்கும். வெள்ளை மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வெளியாகும் இந்த டாப்ளெட்டிற்கு சில சுவாரஸ்யமான ஒப்பந்தங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.

ரூ.2,000/- வரை கேஷ்பேக்
ரூ.299/- என்கிற ஜியோ ரீசார்ஜ் செய்வதின் மூலம் இந்த டாப்ளெட்டை வாங்கும் பயனர் ஜியோமணி வழியாக ரூ.2,000/- வரை கேஷ்பேக் பெறலாம். அதாவது இக்கருவியை ரூ.7,500/-க்கு வாங்கலாம். இந்த கேஷ்பேக் ஆனது ரூ.800/- மற்றும் ரூ.1200/- என முறையே 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் கழித்தே ஜியோமணியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

9 மணிநேர வீடியோ பின்னணி
சாம்சங் கேலக்ஸி டேப்ளெட் ஏ7.0 ஆனது நிறுவனத்தின் மெலிந்த டிசைன் மற்றும் நான்-ஸ்லிப் பேட்டர்ன்களை கொண்டுள்ளது. இந்த டேப்ளெட்டின் முக்கிய சிறப்பம்சமாக 9 மணிநேர வீடியோ பின்னணி வரை வழங்கும் இதன் 4000எம்ஏஎச் பேட்டரி தான் என்கிறது சாம்சங் நிறுவனம்.

ரேம் மற்றும் உள் சேமிப்பு
டாப்ளெட்டின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 1280 x 800 பிக்சல்கள் என்கிற திரை தீர்மானம் கொண்ட 7 அங்குல எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்பு கொண்டு 1..5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராத்துறை
மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக 200 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு கொண்டுள்ள இக்கருவியின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா (ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃப்ளாஷ்) கொண்டுள்ளது. மறுபக்கம் ஒரு 2 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

கிட்ஸ் பயன்முறை
மேலும் இந்த கேலக்ஸி டேப்ளெட் ஏ 7.0 ஆனது குழந்தைகளுக்கு வடிவமைக்கப்பட்ட கல்வி மற்றும் பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்கும் கிட்ஸ் பயன்முறையை தன்னுள் கொண்டிருக்கிறது. மேலும் சாதனம் பயன்பாட்டு நேர வரம்புகளை அமைக்கவும், பயன்பாட்டு அணுகலை கட்டுப்படுத்துவதற்குமான அம்சங்களை பேரன்டிங் கண்ட்ரோல் (பெற்றோர் கட்டுப்பாடு) பெயரின்கீழ் வழங்குகிறது.

இணைப்பு ஆதரவு
இணைப்பு ஆதரவுகளை பொருத்தமட்டில் இந்த கேலக்ஸி டாப்ளெட் 7.0 ஆனது வைஃபை, வைஃபை டைரக்ட், ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், க்ளோநாஸ், வோல்ட் மற்றும் எப்எம் ரேடியோ ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications