லேப்டாப்பை மிஞ்சும் கேலக்சி டேப் எஸ்3 : நாளை முதல் இந்தியாவில்.!
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 3 ஆரம்பத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2017-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் சமீபத்தில் இந்தியாவில் அதன் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் ஜே7 மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் அதன் புதிய சாதனம் ஒன்றை தொடங்குவதற்கு அனைத்து பணிகளையும் நிறுவனம் அமைதுள்ளது போல் தெரிகிறது.

அதாவது இம்முறை வெளியாகப்போவது ஸ்மார்ட்போன் அல்ல சாம்சங் கேலக்ஸி டேப்ளெட் எஸ்3 9.7 ஆக இருக்கலாம். வெளியான தகவலின்கீழ் இந்த சாதனம் இந்தியாவில் நாளை அறிவிக்கப்படலாம். நாளை அதாவது ஜூன் 20-0ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவிருக்கும் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான தகவல்களை நிறுவனம் ஏற்கனவே செய்தி ஊடகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 3 ஆரம்பத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்த்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2017-இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை நிர்ணயம்
சுமார் ரூ.39,338/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த டாப்ளெட்டிற்கான விசைப்பலகை இணைப்பு ரூ.8,521/- ஆகும். அம்சங்களை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 ஆனது 9.7 இன்ச் க்யூஎக்ஸ்ஜிஏ (QXGA) சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளேடன் 2048 x 1536 பிக்ஸல் திரை தீர்மானம் கொண்டது.

எச்டிஆர் வீடியோ
இதர டேப்ளெட் கூட்டத்தில் இருந்து வெளியே நிற்கும் அம்சம் ஒன்றை கொண்டுள்ளது. அதாவது எச்டிஆர் (HDR) தரத்தில் உள்ள வீடியோக்களை (10 பிட் வண்ணம்) ரியல் லைஃப் நிறங்கள் மற்றும் தெளிவான டிஜிட்டல் உள்ளடக்கம் கொண்டு பதிவு செய்யும் ஆதரவு கொண்டுள்ளது.

கருப்பு மற்றும் சில்வர்
இந்த சாதனம் எஸ் பென் உடன் தொகுக்கப்பட்டு உடன் ஒரு போகோ விசைப்பலகை அட்டை கொண்டு வருகிறது. இது சாதகமான சாதனத்துடன் இணைக்கப்படலாம். மேலும் இந்த டேப் கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வருகிறது.

நான்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்
இந்த டேப்ளெட் நான்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டு வருகிறது, இது ஏ.கே.ஜி. மூலம் சரிசெய்யப்படுகிறது, மேலும் நீங்கள் லேண்ட்ஸ்கேப்பில் இருந்து போட்ரியட்தனுக்கு மாற்றும்போது தானாகவே இது திசையை மாற்றியமைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

ரேம் மற்றும் மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறனுடன் இணைக்கப்பட்டுள்ள பழைய குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 பிராஸசர் மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கப்படக்கூடிய சாதனமாக இது இயங்கும்.

கேமரா
கேமராவை பொறுத்தமட்டில் இந்த சாதனம் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. இந்த டேப்ளெட் சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது

பேட்டரி
பாஸ்ட் சார்ஜிங் உடனான 6000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி 12 மணி நேரம் வீடியோ பின்னணி கொடுக்கிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, யூஎஸ்பி டைப்-சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை வழங்குகிறது. பரிமாணங்களை பொறுத்தவரை 9.34 x 6.65 x 0.24 இன்ச் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications