அடிதூள்.. வெறும் ரூ.8,999 க்கு இறங்கி வந்த லேட்டஸ்ட் Samsung டேப்லெட்!

|

கொஞ்சம் நக்கலாக சொல்ல வேண்டுமென்றால்.. Samsung நிறுவனம் நல்ல லாபத்தில் போய் கொண்டிருக்கிறது போல! ஏனென்றால், கடந்த சில தினங்களாகவே சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது.

நினைவூட்டும் வண்னம் Samsung நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன Galaxy S21 FE மீது ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மிட்-ரேன்ஜ் மாடலான Galaxy F23 5G மீது ரூ.1,500 என்கிற விலைக்குறைப்பு கிடைத்தது.

இப்போது மீண்டும் ஒரு PRICE CUT!

இப்போது மீண்டும் ஒரு PRICE CUT!

ஆனால் ஸ்மார்ட்போன் மீது அல்ல; சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் ஒன்றின் மீது! அதென்ன டேப்லெட்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன?

விலைக்குறைப்பை தவிர்த்து வேறு ஏதேனும் ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? அல்லது தவிர்த்து விடலாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

Galaxy Tab A7 Lite மீது தான் Price Cut அறிவிக்கப்பட்டுள்ளது!

Galaxy Tab A7 Lite மீது தான் Price Cut அறிவிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் Samsung Galaxy Tab A6 Lite டேப்லெட்டின் மீதான விலைக் குறைப்பை தொடர்ந்து சாம்சங் ​​நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஏ7 லைட்டின் விலையையும் குறைத்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்த டேப்லெட் கடந்த 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட து. இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் மொத்தம் இரண்டு "வேரியண்ட்களில்" வருகிறது - LTE மற்றும் WiFi.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், Samsung Galaxy Tab A7 Lite-இன் இரண்டு வேரியண்ட்களுமே இந்த "விலை வீழ்ச்சியை" சந்தித்து உள்ளன.

பழைய விலை விவரங்கள்:

பழைய விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி Tab A7 Lite மீது விலைக்குறைப்பு மட்டும் அல்ல, கூடுதலாக சில சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் ஆனது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் ஆனது. ஒன்று 4G வேரியண்ட் மற்றொன்று WiFi வேரியண்ட் ஆகும். இதன் விலைகள் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.11,999 ஆகும்

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

புதிய விலை விவரங்கள்!

புதிய விலை விவரங்கள்!

தற்போது இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இப்போது 4ஜி வேரியண்ட்-ஐ ரூ.13,999 க்கும், வைஃபை வேரியண்ட்-ஐ ரூ.10,999 க்கும் வாங்கலாம்.

இந்த டேப்லெட் க்ரே மற்றும் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.

எக்ஸ்ட்ரா சலுகைகள் பற்றி?

எக்ஸ்ட்ரா சலுகைகள் பற்றி?

முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy Tab A7 Lite மீது சில கூடுதல் சலுகைகளும் அணுக கிடைக்கிறது. இந்த டேப்லெட்-ஐ வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் "மாதத்திற்கு ரூ.998 முதல்" என்கிற நோ காஸ்ட் EMI விருப்பத்தை பயன்படுத்தலாம்.

இது தவிர்த்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.2,000 என்கிற உடனடி கேஷ்பேக்கையும் பெறலாம். ஆகமொத்தம் ஒருவரால் இந்த டேப்லெட்-ஐ வெறும் ரூ.8,999 க்கு வாங்க முடியும்.

ரூ.10கே பட்ஜெட்டில் இது வொர்த் ஆன Tablet-ஆ?

ரூ.10கே பட்ஜெட்டில் இது வொர்த் ஆன Tablet-ஆ?

இந்த கேள்விக்கு மேலோட்டமாக பதில் சொல்லி விட முடியாது. ஏனெனில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கும்.

எனவே முதலில் Samsung Galaxy A7 Lite டேப்லெட்டின் அம்சங்களை பற்றி விரிவாக பார்த்து விடலாம். பின்னர் இதை யார் எல்லாம் வாங்கலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி பேசுவோம்.

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

கொஞ்சம் சின்ன டிஸ்பிளே தான்!

கொஞ்சம் சின்ன டிஸ்பிளே தான்!

சாம்சங் Galaxy A7 Lite ஆனது 1340 x 800 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 8.7-இன்ச் அளவிலான WUXGA+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பொதுவாக டேப்லெட் என்றாலே 10-இன்ச் டிஸ்பிளே தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இது கொஞ்சம் ஷாக்கிங் ஆக இருக்கலாம்.

மேலும் இது 3ஜிபி / 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22டி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

"போதுமான" ஸ்டோரேஜ்!

இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வருகிறது - 32ஜிபி மற்றும் 64ஜிபி.

இதன் ஸ்டோரேஜை நீட்டிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், மைக்ரோ எஸ்டி கார்டை சேர்ப்பதன் மூலம் அதை சாத்தியமாக்கலாம்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ7 லைட் ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஒன்யூஐ லேயருடன் இயக்கப்படுகிறது.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

விலைக்கு ஏற்ற கேமராக்கள் மற்றும் பேட்டரி; விலையை மீறிய ஸ்பீக்கர்!

விலைக்கு ஏற்ற கேமராக்கள் மற்றும் பேட்டரி; விலையை மீறிய ஸ்பீக்கர்!

இந்த டேப்லெட்டில் ஆட்டோஃபோகஸ் உடனான 8எம்பி பிரைமரி கேமரா (ரியர்) உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை முன்பக்கத்தில் உள்ள 2எம்பி கேமரா பார்த்துக் கொள்கிறது.

கடைசியாக இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Galaxy Tab A7 Lite ஆனது டால்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்டுடன் கூடிய சக்திவாய்ந்த டூயல் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் - மிகவும் எளிமையான மல்டிமீடியா டேப்லெட் ஆகும். சின்னதாக இருந்தாலும் நல்ல டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் நல்ல பேட்டரி என கொடுக்கும் காசுக்கு இது வொர்த் ஆன டேப்லெட் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதில் கிட்ஸ் மோட் இருக்கிறது, எனவே இது குடும்பங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

குறைகளை பற்றி பேசும் போது, செயல்திறனில் அவ்வப்போது தாமதங்கள் ஏற்படுகின்றன, குறிப்பாக கேமிங்கின் போது பெர்ஃபார்மென்ஸ் அடி வாங்குகிறது. மேலும் இதன் கேமராக்களும் கொஞ்சம் சுமார் தான்; கூடவே ஸ்டோரேஜும் குறைவு தான்!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
Samsung Budget Tablet Galaxy Tab A7 Lite Get Price Cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X