Home
Tablets

இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்தது சாம்சங்.!

கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ, கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல்கள் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இருந்தபோதிலும் சிறந்த
தொழில்நுட்ப அடிப்படையில் இந்த சாதனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்தது சாம்சங்.!

கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனம் பொதுவாக கருப்பு, சில்வர் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும்,அதேபோன்று கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனம் கருப்பு, நீலம், தங்கம், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்5இ டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்5இ டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனம் 10.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2560 x 1600 பிக்சல்
திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த
சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி டேப் எஸ்5இ கேமரா:

கேலக்ஸி டேப் எஸ்5இ கேமரா:

கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் மற்றும் 7040எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த ஆடியோ வசதி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது டேப் எஸ்5இ மாடல்.

கேலக்ஸி டேப் ஏ 10.1 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் ஏ 10.1 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x1200 பிக்சல் திர்மானம் மற்றும் 16:10 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7904 சிப்செட் மற்றும் மாலி-ஜி71 மாலி ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

கேலக்ஸி டேப் ஏ 10.1 சேமிப்பு:

கேலக்ஸி டேப் ஏ 10.1 சேமிப்பு:

கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது, பின்பு 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ்அன்லாக், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 6150எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

விலை:

விலை:

கேலக்ஸி டேப் எஸ்5இ சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.28,560-ஆக உள்ளது.
கேலக்ஸி டேப் ஏ 10.1 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.38,599-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung announces Galaxy Tab S5e and Galaxy Tab A 10.1 (2019): Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X