7800 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Redmi பேட்.! பட்ஜெட் விலை.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலை வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி பேட்
மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி பேட் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ரெட்மி பேட் ஆனது 11-இன்ச் 2கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்
விரைவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி/4ஜிபி ரேம்
ரெட்மி பேட் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

7800 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி பேட் ஆனது 7800 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 22.4 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் இந்த ரெட்மி பேட் மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11 எஸ்இ போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

சூப்பர் AMOLED டிஸ்பிளே
6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன். 1080 x 2400 பிக்சல்ஸ், 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 100% DCI-P3 colour gamut, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஹீலியோ ஜி95 சிப்செட்
மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் Mali-G76 3EEMC4 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல்.
கண்டிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

64எம்பி பிரைமரி கேமரா
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்களை வழங்குகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications