Home
Tablets

ஆளுக்கொன்னு வாங்கும் பட்ஜெட்.. ரூ.18,000 போதும்.. 1TB மெமரி.. 8000mAh பேட்டரி.. HD டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரூ.18,000 பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி, 1 டிபி மெமரி சப்போர்ட், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் போன்ற வியக்க வைக்கும் அம்சங்களுடன் ரெட்மி (Redmi) நிறுவனத்தின் ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE) டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி பேட் எஸ்இ அம்சங்கள் (Redmi Pad SE Specifications): இந்த டேப்லெட் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 30Hz மற்றும் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 207 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) சர்டிஃபைடு, 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது.

ரூ.18,000 போதும்.. 1TB மெமரி.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 மொபைல் (Qualcomm Snapdragon 680 Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ரெட்மி டேப்லெட் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி எஸ்இ டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் எச்டி (HD) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்து கொள்ள முடியும். இந்த போனில் மிக முக்கியமான அம்சமாக 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி மூலம் 21 மணி நேரத்துக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கும். அதே போல 12 மணி நேரம் கேமிங் பிளேபேக் கிடைக்கும். இந்த ரெட்மி எஸ்இ டேப்லெட்டில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சவுண்டிங் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும்.

இந்த டேப்லெட்டில் பேஸ் அன்லாக் (Face Unlock) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளூடூத் 5.0, டைப் - சி போர்ட், வை-பை 802 போன்ற கனெக்டிவிட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல், விர்ச்சுவல் அம்பியன்ட் லைட் சென்சார் (Virtual Ambient Light Sensor), ஹால் சென்சார் (Hall Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) மற்றும் ரெட்மி ஸ்டைலஸ் (Redmi Stylus) போன்ற அம்சங்களும் வருகின்றன.

இந்த ரெட்மி எஸ்இ டேப்லெட் கிராபைட் கிரே (Graphite Gey), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் லாவண்டர் பர்பிள் (Lavender Purple) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,110 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 20,835 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 22,655 ஆகவும் இருக்கிறது. இந்த டேப்லெட் முதலில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது. அதற்கு அடுத்த சில வாரங்களில், இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad SE With 8GB RAM, 8000mAh Battery, Snapdragon 680 Announced Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X