பட்ஜெட் டேப்லெட்.. 4GB ரேம்.. 8MP கேமரா.. 8000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 10W சார்ஜிங், 8,000mAh பேட்டரி போன்ற பக்கவான அம்சங்களுடன் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி பேட் எஸ்இ (Redmi Pad SE) வெளியாக இருக்கிறது.
சமீப காலமாக ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பினை போலவே, டேப்லெட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், வீட்டில் இருக்கும் குழந்தைகளிடையே டேப்லெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் இருக்கும் போனை அவர்களிடம் கொடுப்பதற்கு பதிலாக வீடியோ பார்க்க மட்டும் டேப்லெட் வாங்கி கொடுத்துவிடலாம் என்று பெற்றோர்களும் முடிவு செய்து வருகின்றனர்.

இதனால் அதுதொடர்பான மார்கெட்டும் வளர்ச்சியடைந்து, டேப்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் கம்மியான விலையில் பட்டாசான அம்சங்களுடன் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் பட்ஜெட் விலையில் ரெட்மி டேப் எஸ்இ வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் அந்த டேப்லெட்டின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் கசிந்து விட்டன. இந்த கசிந்த அம்சங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ரெட்மி பேட் எஸ்இ அம்சங்கள் (Redmi Pad SE Specifications): இந்த ரெட்மி டேப்லெட் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) பேனல் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 207 பிபிஐ (PPI) பிக்சல் டென்சிட்டி, 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயுஐ பேட் ஓஎஸ் (MIUI PAD OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 680 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி எஸ்இ டேப்லெட் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இதில் விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த ரெட்மி டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமரா எச்டி (HD) சப்போர்ட் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 8,000mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரி 21 மணி நேரம் வீடியோ பிளேபேக் அல்லது 12 மணி நேரம் கேமிங் பிளேபேக் கொடுக்கக் கூடியது. இந்த டேப்லெட்டில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம் (Quad Speaker System) வருகிறது. இதனால் கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் அனுபவத்தை பெற முடியும்.
இந்த டேப்லெட்டில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Fingerprint Scanner) கொடுக்கப்படவில்லை. இருப்பினும், பேஸ் அன்லாக் (Face Unlock) அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விர்ச்சுவல் அம்பியன்ட் லைட் சென்சார் (Virtual Ambient Light Sensor), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), ஹால் சென்சார் (Hall Sensor), டைப் - சி சார்ஜிங் போர்ட், ரெட்மி ஸ்டைலஸ் (Redmi Stylus) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ரெட்மி பேட் எஸ்இ டேப்லெட்டின் விலை ரூ.17,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இது கிரே (Gey), கிரீன் (Green) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருவது அதன் லீக்கான போட்டோக்கள் மூலம் தெரிய வருகிறது. பட்ஜெட் விலையில் நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட டேப்லெட் வேண்டுமென்றால், இந்த ரெட்மி பேட் எஸ்இ பொருத்தமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








