Home
Tablets

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. டால்பி ஆடியோ.. 10000mAh பேட்டரி.. Redmi டேப்லெட் ரெடி.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ (Redmi Pad Pro) மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் ரெட்மி பேட் ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சமீபத்தில் BIS சான்றிதழ் தளத்தில் ரெட்மி பேட் ப்ரோ இந்த டேப்லெட் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல் நம்பர் 2405CRPFDI என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. Redmi டேப்லெட் ரெடி.. எந்த மாடல்?

ரெட்மி பேட் ப்ரோ அம்சங்கள் (Redmi Pad Pro Specifications): 12.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட். 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வசதியுடன் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது இந்த ரெட்மி டேப்லெட். அதேபோல் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. Redmi டேப்லெட் ரெடி.. எந்த மாடல்?

8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். மேலும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), குவாட் ஸ்பீக்கர்கள், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதுதவிர அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor), 10000mAh பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த டேப்லெட் வரும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த சாதனம் 5ஜி ஆதரவுடன் அறிமுகமாகும்.

இந்தியாவில் ரெட்மி பேட் ப்ரோ ஆனது ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Pro will be launched in India soon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X