வாங்குனா நீதான்.. ரூ.23440 போதும்.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. 1.5TB மெமரி.. 10000mAh பேட்டரி.. எந்த டேப்லெட்?
டேப்லெட்டில் 5ஜி சிம் கார்டு சப்போர்ட் மட்டுமல்லாமல், 2.5K ரெசொலூஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட சியோமி ஹைபர்ஓஎஸ், 1.5 டிபி மெமரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த டேப்லெட்டின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம்.
மொபைல் போனுக்கு நிகரான ஸ்பீடு லேப்டாப்புக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும் டேப்லெட் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டாப் ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், டூயல் சிம் சிலாட் மட்டுமல்லாமல், 5ஜி சிம் கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. இது வை-பை மாடல்களைவிட பக்கா ஸ்பீடு பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. மிட்-ரேஞ்ச் மொபைல் போனுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வருகிறது.
அதேபோல அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது. 2.5K ரெசொலூஷன் கொண்ட 12.1 (2560 × 1600 pixels) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இதுபோக டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டிஸ்பிளே பாதுகாப்புக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 1.5 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பயன்படுத்தலாம்.

மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது. இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 10000mAh பேட்டரி வருகிறது. அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor) உள்ளது.
அதேபோல இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. டேப்லெட் மாடலில் வழக்கமாக கொடுக்கப்படும் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ஆனால், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட்டில் வருகிறது. 7.52 எம்எம் தடிமன், 566 எடை கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட் 3 கலர்கள் கொண்டிருக்கிறது. ஆனால், டார்க் கிரே (Dark Gray) மாடல் மட்டும் இப்போது, வெளியாகி இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,440ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 மெமரி மாடலின் விலை ரூ.28,130ஆகவும் இருக்கிறது. இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








