கொஞ்சம் பொறுங்க..10000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. வருகிறது புதிய Redmi 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த டேப்லெட் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த டேப்டெல் மாடல் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தற்போது தகவல் வெளியாகி உளளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட ஸ்னாப்டிராகன் சிப்செட் ஃமேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்து. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இதில் உள்ளது.
அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம் அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor)வசதி உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 571 கிராம் ஆகும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.23,000 பட்ஜெட்டில் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








