Home
Tablets

காத்திருப்பு ஓவர்.. 10000mAh பேட்டரி.. 25GB மெமரி.. இந்தியாவுக்கு வந்த Redmi 5ஜி டேப்லெட்.. என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 10,000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வந்த Redmi 5ஜி டேப்லெட்.. என்ன விலை?

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS)மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி ஆனது அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வந்த Redmi 5ஜி டேப்லெட்.. என்ன விலை?

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது இந்தரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குவிக் சில்வர் (Quick Silver), கிராஃபைட் கிரே (Graphite Gray) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

10000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த டேப்லெட். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 6 802.11ஏசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி 2.0 போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வந்த Redmi 5ஜி டேப்லெட்.. என்ன விலை?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999-ஆக உள்ளது. அமேசான், பிளிப்கார்ட், எம்ஐ.காம் தளங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி விற்பனை இதன் விற்பனை தொடங்குகிறது.

குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி உள்ளது. பின்பு ரூ.3,999 மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட் பென், மற்றும் ரூ.3,999 ரெட்மி பேட் ப்ரோ கீபோர்ட்டு சாதனங்களும் இந்த டேப்லெட் மாடல் உடன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Pro 5G Launched in India: check specifications price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X