Home
Tablets

ஆர்டர் போட்ருங்க.. 10000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Redmi 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

இந்தியாவில் 4ஜி டேப்லெட் மாடல்களை விட 5ஜி டேப்லெட் மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு 5ஜி டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் இந்தியாவில் பட்ஜெட் விலை டேப்லெட் மாடல்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மாடல் அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Wi-Fi 6 + 5G) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.21,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. 10000mAh பேட்டரி.. ஆஃபரில் Redmi 5ஜி டேப்லெட்..

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெளிவந்தது. பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.

அதேபோல் 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இந்த டேப்லெட் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

Take a Poll

தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. குவிக் சில்வர் (Quick Silver), கிராஃபைட் கிரே (Graphite Gray) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

குறிப்பாக 10000mAh பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை 6 802.11ஏசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி 2.0 போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Pro 5G is available at discounted price on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X