ஜூலை 29 வரை வெயிட் பண்ணுங்க.. 10000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. வருகிறது Redmi 5ஜி பேட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மாடலை வரும் ஜூலை 29-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 2.5கே டிஸ்பிளே, டால்பி விஷன், குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட் இந்தியாவுக்கு வரும். பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS)மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட்
மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடலில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம் அதேபோல் இந்த டேப்லெட் அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor) வசதியுடன் வெளிவரும்.
குறிப்பாக 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவரும். மேலும் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
அதேபோல் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்து. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது இந்தரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
10000mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த டேப்லெட். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் எடை 571 கிராம் ஆகும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரூ.23,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








