Home
Tablets

இப்படியொரு டேப்லெட் மாடலுக்கு தான் வெயிட்டிங்:நல்ல செய்தி சொன்ன Redmi.!

ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி பேட் 4ஜி (Redmi Pad 4G) எனும் டேப்லெட் மாடலை வரும் அக்டோபர் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

மேலும் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே இதன் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது 91 மொபைல்ஸ் இணையத்தில் இந்த ரெட்மி பேட் 4ஜி சாதனத்தின் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

புதிய ரெட்மி பேட் 4ஜி சாதனம் ஆனது 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,000 x 1,200 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் இந்த டேப்லெட்.

பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நிறங்கள்

நிறங்கள்

ரெட்மி பேட் 4ஜி மாடல் ஆனது கிரே, சில்வர், கிரீன் போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் எடை 445 கிராம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

மீடியாடெக் பிராசஸர்

மீடியாடெக் பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 4ஜி பிராசஸர் உடன் இந்த ரெட்மி பேட் 4ஜி மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அசத்தலான ரெட்மி டேப்லெட்.

64ஜிபி ஸ்டோரேஜ் வசதி

64ஜிபி ஸ்டோரேஜ் வசதி

புதிய ரெட்மி பேட் 4ஜி மாடலில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

 8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

ரெட்மி பேட் 4ஜி மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட்.

 8000 எம்ஏஎச் பேட்டரி

8000 எம்ஏஎச் பேட்டரி

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி பேட் 4ஜி மாடலில் 8000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 22.5 வாட்ஸ் பாஸட் சார்ஜிங் ஆதரவு, டால்பி அட்மாஸ் குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல
சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi Pad 4G Specs, Images Leaked Before Launch: Full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X