Home
Tablets

கம்மி விலையில் புதிய டேப்லெட் மாடலை இறக்கிவிடும் Redmi: அறிமுகம் எப்போது தெரியுமா?

ரெட்மி நிறுவனம் ஒன்பிளஸ், விவோ, மோட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரெட்மி நிறுவனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களை அறமுகம செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ரெட்மி நிறுவனம் தனது இரண்டாவது டேப்லெட் மாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது ரெட்மி பேட் 2 பெயரில் உருவாகி வரும் புதிய டேப்லெட் எப்சிசி(fcc)என்ற வலைத்தளத்தின் மூலம் லீக்க ஆகி உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி பேட் 2 என்கிற டேப்லெட் ஆனது இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கம்மி விலையில் புதிய டேப்லெட் மாடலை இறக்கிவிடும் Redmi.!

அதேபோல் இந்த ரெட்மி பேட் 2 மாடலின் விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி பேட் 2 ஆனது 23073RPBFL எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பின்பு இந்த டேப்லெட் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இதன் எண்ட்ரி லெவல் மாடலில் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும். பின்பு இதனுடன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட் அறிமுகமாகும். கடைசியாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்னொரு வேரியண்ட் கூட அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி பேட் 2 ஆனது 11-இன்ச் 2கே ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி டேப்லெட் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி விலையில் புதிய டேப்லெட் மாடலை இறக்கிவிடும் Redmi.!

இந்த ரெட்மி பேட் 2 மாடலில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8எம்பி ரியர் கேமராவுடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த ரெட்மி டேப்லெட் வெளிவரும். ஆனால் இந்த டேப்லெட் மாடலில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

கம்மி விலையில் புதிய டேப்லெட் மாடலை இறக்கிவிடும் Redmi.!

ரெட்மி பேட் 2 மாடல் 8000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி டேப்லெட் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 with Snapdragon 680 chipset will be launched soon: Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X