Home
Tablets

கொஞ்சம் பொறுங்க.. இந்தியர்களுக்கு மலிவு விலை டேப்லெட் நிச்சயம்.. மாபெரும் குட் நியூஸ் சொன்ன சொன்ன Redmi.!

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி பேட் 2 மாடலை அறிமுகம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் 3C சான்றிதழ் இணையதளத்தில் இந்த ரெட்மி பேட் 2 மாடலின் மாடல் எண் மற்றும் முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த ரெட்மி பேட் 2 மாடலின் மாடல் எண் 23073RPBFG என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் முக்கிய அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கொஞ்சம் பொறுங்க: இந்தியர்களுக்கு மலிவு விலை Redmi டேப்லெட் நிச்சயம்..

அதாவது தற்போது வெளியான தகவலின்படி இந்த ரெட்மி பேட் 2 மாடல் ஆனது 8000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 22.5 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரெட்மி பேட் 2 ஆனது 11-இன்ச் 2கே ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவரும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி டேப்லெட் அறிமுகமாகும். பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக ரெட்மி பேட் 2 மாடலில் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு இதனுடன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு வேரியண்ட் அறிமுகமாகும். கடைசியாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்னொரு வேரியண்ட் கூட அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த டேப்லெட் மாடலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ரெட்மி பேட் 2 மாடலில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். கேமிங் வசதிக்குத் தகுந்த சிறப்பான மென்பொருள் வசதி இதில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பொறுங்க: இந்தியர்களுக்கு மலிவு விலை Redmi டேப்லெட் நிச்சயம்..

அதேபோல் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் இந்த ரெட்மி பேட் 2 அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட். அதேபோல் இதில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

வைஃபை, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியா ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகமாகும். பின்பு இந்த ரெட்மி டேப்லெட் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி பேட் 2 மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 to launch soon with 8000 mAh battery: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X