அறிமுகமானது புது ரெட்மி டேப்லெட்.. 7600எம்ஏஎச் பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி (Redmi Pad 2 SE 4G) மாடலை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி அம்சங்கள் (Redmi Pad 2 SE 4G Specifications): 9.7-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2048 x 1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 2கே ரெசல்யூஷன் (2K Resolution), 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலம் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6எஸ் 4ஜி ஜென் 2 (Snapdragon 6s 4G Gen 2) சிப்செட் உடன் ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளது.
HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
3.5எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆதரவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7600எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். வைஃபை 5, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் சிம் 4ஜி போன்ற ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
ரெட்மி பேட் 2 எஸ்இ 4ஜி மாடலின் ஆரம்ப விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.15,069)-ஆக உள்ளது. சில்வர் நிறத்தில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








