Home
Tablets

புதிய Redmi டேப்லெட் அறிமுகம்.. 12000mAh பேட்டரி.. 5ஜி.. டால்பி அட்மாஸ்.. ஆண்ட்ராய்டு 15 OS.. என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 ப்ரோ (Redmi Pad 2 Pro) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 12000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டேப்லெட். இப்போது இந்த புதிய ரெட்மி பேட் 2 ப்ரோ டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் 2 ப்ரோ அம்சங்கள் (Redmi Pad 2 Pro Specifications): 12.1-இன்ச் 2.கே எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், டிசி டிம்மிங், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

புதிய Redmi டேப்லெட் அறிமுகம்.. 12000mAh பேட்டரி.. 5ஜி.. என்ன விலை?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ரெட்மி பேட் 2 ப்ரோ மாடலின் வைஃபை வேரியண்ட் 8எம்பி ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் 5ஜி வேரியண்ட் 13எம்பி கேமரா உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் மூலம் 1080பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு டூயல் மைக்ரோபோன்ஸ் ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது.

12000mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி (இசிம் சப்போர்ட்), வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 610 கிராம் ஆகும். கிராஃபைட் கிரே, சில்வர் மற்றும் லாவெண்டர் பர்பிள் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

தற்போது ரெட்மி பேட் 2 ப்ரோ ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Redmi டேப்லெட் அறிமுகம்.. 12000mAh பேட்டரி.. 5ஜி.. என்ன விலை?

ரெட்மி பேட் 2 ப்ரோ விலை:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ Wi-Fi மாடலின் விலை 299.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.31,245)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ Wi-Fi மாடலின் விலை 349.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.31,245)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ Matte Glass மாடலின் விலை 379.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.39,580)
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ 5G மாடலின் விலை 379.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.39,580)
ரெட்மி பேட் 2 ப்ரோ கீபோர்டு விலை 99.99 Euros (இந்திய மதிப்பில் ரூ.10,415)

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 Pro launched with 12000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X