விலை இவ்வளவு தானா? இந்தியாவுக்கு வரும் புதிய Redmi 5G டேப்லெட்.. 12000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (Redmi Pad 2 Pro 5G) மாடலை வரும் ஜனவரி 6-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த டேப்லெட் மாடலின் விலை வெளியாகி உள்ளது.
அதன்படி, இந்தியாவில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (WiFi only) கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் ஆனது ரூ.25,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட (5G) வேரியண்ட் ரூ.28,000 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட (5G) வேரியண்ட் ரூ.30,000 விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad 2 Pro 5G Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), டால்பி விஷன், 2,560x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
தரமான குவால்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிரான் 7எஸ் ஜென் 4 சிப்செட்(Qualcomm's octa core Snapdragon 7s Gen 4 chipset) உடன் இந்த ரெட்மி டேப்லெட் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. ரெட்மி பேட் பென் ஸ்டைலஸ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி டேப்லெட் வெளிவரும்.
அதேபோல் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது . இதுதவிர 300 சதவீத ஆடியோ பூஸ்ட் ஆதரவும் இதில் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

12,000mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
அதுவும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








