ஓடியாங்க, ஓடியாங்க.. 12000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. செம ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (Redmi Pad 2 Pro 5G) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.4250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.25,749 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad 2 Pro 5G Specifications): ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் 13-இன்ச் 2.கே எல்சிடி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன், டிசி டிம்மிங், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
HyperOS 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் 13எம்பி கேமரா உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் மூலம் 1080பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்ய முடியும்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு டூயல் மைக்ரோபோன்ஸ் ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது.

12000mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி (இசிம் சப்போர்ட்), வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் எடை 610 கிராம் ஆகும். கிராஃபைட் கிரே, சில்வர் நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
