Home
Tablets

நாடே எதிர்பார்த்த Redmi 5ஜி டேப்லெட் வருகிறது.. 12,000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (Redmi Pad 2 Pro 5G) மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த டேப்லெட் அறிமுகமாகும். இந்நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் இந்த ரெட்மி டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Pad 2 Pro 5G Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), டால்பி விஷன், 2,560x1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

நாடே எதிர்பார்த்த Redmi 5ஜி டேப்லெட் வருகிறது.. எந்த மாடல்?

தரமான குவால்காம் ஆக்டா கோர் ஸ்னாப்டிரான் 7எஸ் ஜென் 4 சிப்செட் (Qualcomm's octa core Snapdragon 7s Gen 4 chipset) உடன் இந்த ரெட்மி டேப்லெட் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

8எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. ரெட்மி பேட் பென் ஸ்டைலஸ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி டேப்லெட் வெளிவரும்.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) போன்ற ஆடியோ அம்சங்கள் கொண்ட குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல். இதுதவிர 300 சதவீத ஆடியோ பூஸ்ட் ஆதரவும் இதில் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

நாடே எதிர்பார்த்த Redmi 5ஜி டேப்லெட் வருகிறது.. எந்த மாடல்?

12,000mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லெட் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 Pro 5G Amazon and Flipkart availability confirmed in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X