பட்ஜெட் விலை.. 9000mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. புதிய Redmi டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 பிளே பண்டில் (Redmi Pad 2 Play Bundle) எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி பேட் 2 பிளே பண்டில் அம்சங்கள் (Redmi Pad 2 Play Bundle Specifications): 11-இன்ச் 2.5கே மேட் கிளாஸ் டிஸ்ப்ளேவை (2.5K matte glass display) கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. எனவ இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதோடு டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (2.5K matte glass display) கொண்டிருக்கிறது இந்த சாதனம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி பேட் 2 பிளே பண்டில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி-100 அல்ட்ராா பிராசஸர்(MediaTek Helio G100-Ultra processor) உடன் ரெட்மி பேட் 2 பிளே பண்டில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராஸசர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி பேட் 2 பிளே பண்டில் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய ரெட்மி டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
9000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி பேட் 2 பிளே பண்டில் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செயய் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

1080p வீடியோ பதிவு செய்யும் 8எம்பி ரியர் கேமராவுடன் இந்த ரெட்மி பேட் 2 பிளே பண்டில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. அதேபோல் வைஃபை 5, புளூடூத் 5.3, யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
ஆனால் ரெட்மி பேட் 2 மாடல் ஆனது தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி பேட் 2 மாடலின் விலை €199.90 (இந்திய மதிப்பில் ரூ.20,559)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications