Home
Tablets

யாரு சாமி நீ.. ரூ.12,999 பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆண்ட்ராய்டு 15 OS..

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டால்பி அட்மாஸ், 4ஜி ஆதரவு, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 9000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ரெட்மி பேட் 2 மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் 2 அம்சங்கள் (Redmi Pad 2 Specifications): 11 இன்ச் 2.5கே டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பிரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,டிசி டிம்மிங், TUV ரைன்லேண்ட் சான்றிதழ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

யாரு சாமி நீ.. ரூ.12,999 பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்..

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி100-அல்ட்ரா (MediaTek Helio G100-Ultra) பிராசஸர் உடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட் செயல்திறன் வழங்கும். அதேபோல் மாலி ஜி57 எம்சி2 கிராபிக்ஸ் கார்டு உடன் புதிய ரெட்மி டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

ஹைப்பர் ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரெட்மி பேட் 2 மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். "சர்க்கிள் டு சர்ச்" (Circle to Search), ஜெமினி (Gemini) போன்ற பல அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கிடைக்கிறது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio)உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் குவாட் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் 3.5மிமீ ஹெட்ஜாக் சப்போர்ட் இதில் உள்ளது.

ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), விரிச்சுவல் ஏஎல்எஸ்(Virtual ALS), கைரோஸ்கோப் (Gyroscope), மேக்னட்டோமீட்டர் (magnetometer) உள்ளிட் பல்வேறு சென்சார் வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி மற்றும் யுஎஸ்பி 2.0 ஆதரவுகளுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஸ்கை ப்ளூ (Sky Blue), கிராஃபைட் கிரே (Graphite Grey) நிறங்களில் இந்த ரெட்மி பேட் 2 மாடலை வாங்கலாம்.

9000mAh பேட்டரியுடன் இந்த ரெட்மி பேட் 2 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என ரெட்மி நிறுவனம் கூறியுள்ளது.

யாரு சாமி நீ.. ரூ.12,999 பட்ஜெட்ல 9000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்..

ரெட்மி பேட் 2 விலை:
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (Wi-Fi) கொண்ட ரெட்மி பேட் 2 மாடலின் விலை ரூ.13,999
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி (Wi-Fi + 4G) கொண்ட ரெட்மி பேட் 2 மாடலின் விலை ரூ.15,999
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி (Wi-Fi + 4G) கொண்ட ரெட்மி பேட் 2 மாடலின் விலை ரூ.17,999

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் எம்.காம் தளங்களில் ரெட்மி பேட் 2 மாடலை வாங்க முடியும். வரும் ஜூன் 24-ம் தேதி முதல் இந்த டேப்லெட் மாடலின் விற்பனை தொடங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரெட்மி டேப்லெட் மாடலை ரூ.12,999 விலையில் வாங்கிவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X