அடுத்த Redmi டேப்லெட் ரெடி.. 9000mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் அடுத்து ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ரெட்மி பேட் மாடலுக்கு அடுத்து இந்த புதிய ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி பேட் 2 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி பேட் 2 அம்சங்கள் (Redmi Pad 2 Specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 2500 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2.5கே ரெசல்யூஷன் ( 2.5K resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா (MediaTek's Helio G100 Ultra) சிப்செட் உடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஹைப்பர்ஓஎஸ் 2.1 (HyperOS 2.1) சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகமாகும். குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆடியோ ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய டேப்லெட் வெளிவரும். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி மெமரி + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் ரெட்மி பேட் 2 மாடல் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
9000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி பேட் 2 மாடல் ஆனது கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சியோமி விரைவில் விரைவில் பல அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
photo credit: ytechb


Click it and Unblock the Notifications








