Home
Tablets

இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி டேப்லெட்.. 9000mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் ரெட்மி பேட் 2 (Redmi Pad 2) மாடலின் டீசரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. எனவே இந்த புதிய டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் 2 அம்சங்கள் (Redmi Pad 2 Specifications): தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா (MediaTek's Helio G100 Ultra) சிப்செட் உடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்தியாவுக்கு வரும் புதிய ரெட்மி டேப்லெட்.. எந்த மாடல்?

அதேபோல் 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 1600 x 2500 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2.5கே ரெசல்யூஷன் ( 2.5K resolution), 600 நிட்ஸ் பிரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஹைப்பர்ஓஎஸ் 2.1 (HyperOS 2.1) சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரெட்மி பேட் 2 வெளிவரும். பின்பு டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆடியோ ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய டேப்லெட் அறிமுகமாகும். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

அதுவும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி மெமரி + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

ரெட்மி பேட் 2 ஆனது 8எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் மாடல் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் ரெட்மி பேட் 2 அறிமுகமாகும். அதேபோல் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad 2 confirmed to launch in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X