மிரண்டுபோன மார்க்கெட்.. 7500mAh பேட்டரி.. 3K எல்சிடி டிஸ்பிளே.. வருகிறது புதிய Redmi டேப்லெட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி கே பேட் (Redmi K Pad) எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது முதலில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பிறகு மற்ற நாடுகளில் இந்த டேப்டெல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த டேப்லெட் மாடலின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி கே பேட் ஆனது சிங்கிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. அதேபோல் பேட் மினியை விட பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி டேப்லெட். மேலும் டீப் பிளாக் (Deep Black), ஹேஸ் பர்பிள் (haze purple), ஸ்ப்ரூஸ் க்ரீன் ( spruce green) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

ரெட்மி கே பேட் அம்சங்கள் (Redmi K Pad Specifications): 8.8-இன்ச் 3கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400+) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 12,050mm² 'vapor chamber' என்ற பாதுகாப்பு சேம்பரை கொண்டுள்ளது இந்த ரெட்மி கே பேட் மாடல். குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15(Android 15)இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி கே பேட் மாடல் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இது 80.2னடீ சத்தத்தை வெளியிடும்.
7500mAh பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி கே பேட் மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








