Home
Tablets

புதிய ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. 7500mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே பேட் (REDMI K Pad) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. டைமன்சிட்டி சிப்செட், 16ஜிபி ரேம், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்எளது. இப்போது இந்த புதிய ரெட்மி டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி கே பேட் அம்சங்கள் (REDMI K Pad Specifications): 8.8-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3008 x 1880 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, டால்பி விஷன், எச்டிஆர் விவிட், 700 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 372 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

புதிய ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் (Octa-Core Dimensity 9400+) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி கே பேட் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு (Immortalis-G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த சாதனத்தில் உள்ளது.

சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் ,ந்த ரெட்மி கே பேட் மாடல் இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 326 கிராம் எடை கொண்டுள்ளது ,ந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி வசதியும் இந்த டேப்லெட்மாடலில் உள்ளன.

13எம்பி எம்பி ரியர் கேமரா (OV13B sensor) மற்றும் 8எம்பி செல்பி கேமரா (OV08D)உடன் ,ந்த புதிய ரெட்மி டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலம் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.டீப் பிளாக் (Deep Black), ஸ்மோக்கி பர்பிள் (smoky purple), ஸ்ப்ரூஸ் க்ரீன் ( spruce green) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டால்பி அட்மாஸ் (Dolby Atmos),டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளிட் பல வசதிகள் ,ந்த ரெட்மி டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக ,ந்த டேபலெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வைஃபை 7 802.11 பி, புளூடூத் 5.4, யூ.எஸ்.பி டைப்-சி 3.2 ஜென்1, யூ.எஸ்.பி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

புதிய ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?

7500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை ,ருக்காது. அதாவது ,ந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரெட்மி கே பேட் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,430) ஆகும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு ,ருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
REDMI K Pad launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X