அறிமுகமானது புதிய ரெட்மி டேப்லெட்.. 9100mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே பேட் 2 ((REDMI K Pad 2) மாடலை நேற்று (ஏப்ரல் 21) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி கே பேட் 2 அம்சங்கள் (REDMI K Pad 2 specifications): 8.8-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3008 x 1880 பிக்சல்ஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz Refresh Rate), 1080Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், விவிட், டால்பி விஷன், 1100 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9500 3nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாலி-ஜி1 அல்ட்ரா ஜிபியு (Mali G1-Ultra GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டேப்டெல் மாடலில் உள்ளது.
Xiaomi HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த டேப்டெல் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), டூயல் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

9100mAh பேட்டரி உடன் ரெட்மி கே பேட் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. ஆகவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பிளாக், பர்பிள் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.
ரெட்மி கே பேட் 2 விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே பேட் 2 மாடலின் விலை 3599 yuan (இந்திய மதிப்பில் ரூ.49,360)
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே பேட் 2 மாடலின் விலை 3999 yuan (இந்திய மதிப்பில் ரூ.54,850)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே பேட் 2 மாடலின் விலை 4999 yuan (இந்திய மதிப்பில் ரூ.49,360)
வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்த டேப்லெட் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








