ஏப்ரல் 21-ல் களமிறங்கும் புதிய ரெட்மி டேப்லெட்.. 9100எம்ஏஎச் பேட்டரி, எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி கே பேட் 2 மாடலை வரும் ஏப்ரல் 21-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மி கே பேட் 2 அம்சங்கள் (Redmi K Pad 2 Specifications): 8.8-இன்ச் 3கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடல் வெளியாகும். அதுவும் இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 540Hz டச் சாம்பிளிங் ரேட் (touch sampling rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஒசி (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி கே பேட் 2 மாடலில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 9100எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 15,300mm2 வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் போன்ற பல அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. தற்போது ரெட்மி கே பேட் 2 மாடலின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த டேப்லெட் மாடலின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ரெட்மி கே90 மேக்ஸ் (Redmi K90 Max) போனின் அம்சங்களும் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
ரெட்மி கே90 மேக்ஸ் அம்சங்கள் (Redmi K90 Max Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (MediaTek Dimensity 9500 chipset) உடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
6.83-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) வசதி இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதுவும் 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் இந்த புதிய ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவுட் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் ரெட்மி கே90 மேக்ஸ் போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








