யாரு சாமி அவன்.. 24GB ரேம்.. 120W சார்ஜிங்.. 10100mAh பேட்டரி.. 50MP கேமரா.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களும் இப்படிவொரு டேப்லெட் வருமா என்று கனவிலும் நினைக்காதபடி அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் ப்ரோ (REDMAGIC Gaming Tablet PRO) மாடல் களமிறங்கி இருக்கிறது. 10.9 இன்ச் டிஸ்பிளே, 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 10100mAh பேட்டரி, 50 எம்பி கேமரா போன்ற அனைத்து பீச்சர்களும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளன. இந்த டேப்லெட்டின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் ப்ரோ அம்சங்கள் (REDMAGIC Gaming Tablet PRO Specifications): இந்த டேப்லெட்டில் 10.9 இன்ச் (2880 × 1800 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.8K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதுபோக எஸ்ஜிஎஸ் ஐ புரொடெக்சன் (SGS Eye Protection) கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரெட்மேஜிக் ஓஎஸ் (Redmagic OS) வருகிறது. கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் வருகிறது. இதுவொரு லீடிங் வெர்ஷன் (Leading Version) மாடலாகும். அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்துள்ளது.
இந்த ரெட்மேஜிக் கேமிங் டேப்லெட் ப்ரோ டேப்லெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் களமிறங்கி இருக்கிறது. 24 ஜிபி ரேம் கொண்ட டேப்லெட் மாடல்களில் அனைத்து பீச்சர்களையும் அல்ட்ரா பிரீமியமாக இந்த ரெட்மேஜிக் மாடல் மட்டுமே கொண்டிருக்கிறது.
மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடையாது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமே வருகிறது. கேமாவிலும் பிரீமியம் சென்சார்களை பேக் செய்துள்ளது. ஆகவே, சாம்சங் எஸ்5கேஜேஎன்1 (Samsung S5KJN1) சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி20பி40 (OmniVision OV20B40) சென்சாருடன் 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers)மற்றும் 3 மைக்குகள் (Mics) வருகின்றன. டேப்லெட் மாடல்களில் இதுவரை எதிர்பார்க்காத பேட்டரி சிஸ்டம் இந்த ரெட்மேஜிக் மாடலில் வருகிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10100mAh பேட்டரி வருகிறது. வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபுல் சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் தேவைப்படும்.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரிக்காக மேஜிக் கூலிங் ஐஸ் 2.0 ( Magic Cooling ICE 2.0) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹை-ஸ்பீடு சென்ட்ரிபியூகள் ஃபேன் (High-speed Centrifugal Fan), 3டி ஹீட் பைப் (3D Heat Pipe) மற்றும் 3டி இன்டர்னல் சர்க்குளேஷன் ஏர் டக்ட் (3D Internal Circulation Air Duct) டிசைன் கொண்டிருக்கிறது. டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் (Dual X-axis Motor) வருகிறது.
வை-பை 6ஈ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.48,470 ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,385 ஆகவும், 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ. 67,395 ஆகவும் இருக்கிறது.
டியூட்ரியம் டிரான்ஸ்பரென்ட் சில்வர் (Deuterium Transparent Silver) மற்றும் டியூட்ரியம் டிரான்ஸ்பரென்ட் டார்க் நைட் (Deuterium Transparent Dark Night) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு வர இருக்கிறது. குளோபல் மார்கெட்டுக்கு பிறகு மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications